Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக முதலமைச்சர் அறிவிப்பு

பிப்ரவரி 19, 2020 12:20

சென்னை: தமிழக சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 110-வது விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அதில்:-

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும். ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 21 வயது ஆகும்போது ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு, சமூக பொருளாதார நிலையை கருதி இந்த சிறப்பு உதவி தொகுப்பு வழங்கப்படுகிறது. ஹஜ் யாத்திரை செல்லும் பயணிகளுக்கு சென்னையில் ரூ.15 கோடியில் தங்கும் இல்லம் அமைக்கப்படும். உலமாக்களின் ஓய்வூதியத்தை ரூ.1500-ல் இருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும். 

இவ்வாறு அவர் பேசினார். 

தலைப்புச்செய்திகள்