Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வங்கி ஊழியரின் செல்போன்களில் 200 ஆபாச வீடியோக்கள்

பிப்ரவரி 19, 2020 12:22

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (வயது 36). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும் தஞ்சாவூர் அருகேயுள்ள கள்ளப் பெரம்பூர் பகுதியை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த 2½ மாதங்கள் தான் ஆகிறது. மணப்பாறையில் குடும்பம் நடத்த தொடங்கிய புதுமண தம்பதியருக்கிடையே ஆரம்பம் முதலே வெறுப்பும், விரக்தியுமே இருந்துள்ளது. இரவில் வெகுநேரம் செல்போனில் மூழ்கியிருந்த ஜெயக்குமார் திடீரென மேலும் 50 பவுன் நகை வரதட்சணையாக வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். 

இல்வாழ்க்கை பிரச்சினைக்கு கூடுதல் வரதட்சணை ஒரு காரணமாக இருக்காது என்பதை உறுதிப்படுத்திய தாட்சர், கணவருக்கு தெரியாமல் அவரது செல்போனை பார்த்த போதுதான் உண்மை வெளிவந்தது. அருவருப்பான மற்றும் ஆபாசமான வீடியோக்கள் அந்த செல்போன் முழுவதையும் ஆக்கிரமித்து இருந்தது. பல பெண்களின் வங்கி கணக்கு குறித்த விபரங்களும் அதில் பதிவாகி இருந்தன. வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்கள், அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களின் அங்க அசைவுகள் குறித்த ஆபாச வீடியோக்களும் அதில் இருந்தன.

இந்த செயல்களுக்கு கணவருடன் வங்கியில் பணியாற்றும் தேவி பிலோ மினா என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார்.பல்வேறு வகைகளில் லோன் வாங்குவதற்காக வங்கிக்கு வருகை தரும் பெண் வாடிக்கையாளர்களை தேவி பிலோமினாள் மூளைச் சலவை செய்து அவர்களை செக்சுக்கு உட்படுத்தி, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

தனது வி‌ஷயத்தை மனைவி அறிந்து கொண்டதால் அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமார் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். மனைவி போலீசுக்கு போனால் தன்னை கைது செய்து விடுவார்கள் என்ற அச்சத்தில் மதுரை ஐகோர்ட்டில் முன் ஜாமீனும் பெற்றுள்ளார்.

ஜெயக்குமார் 15 செல்போன்களை பயன்படுத்தி வந்துள்ளார். அதில் கணவருக்கு தெரியாமல் எடுத்த 2 செல்போன்களில் மட்டுமே 200 ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் இடம்பெற்றிருந்தன. மற்ற செல்போன்களில் இருந்த படங்களை ஜெயக்குமார் அவசரம், அவசரமாக அழித்துள்ளார். அதனை பறிமுதல் செய்யவேண்டும் என்று தகுந்த ஆதாரங்களுடன் தாட்சர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அதன் அடிப்படையிலேயே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஜெயக்குமார், அவரது தாய், சகோதரி, உறவுக்கார பெண் மற்றும் வங்கியில் உடன் வேலை பார்க்கும் தேவி பிலோமினாள் ஆகிய 5 பேரையும் தேடி வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்