Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் கட்டுமான தொழில்நுட்ப கண்காட்சி: கொடிசியா பிரசிடென்ட் அறிவிப்பு

பிப்ரவரி 20, 2020 12:34

கோவை: கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கொடிசியா பிரசிடென்ட் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவையின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
அப்போது அவர்கள் கூறியதாவது:

கட்டுமான தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் நீர் மறுசுழற்சி தொழில்நுட்ப கண்காட்சி 2020 எனும் கண்காட்சி கோவை கொடிசியா அரங்கில், பிப்ரவரி 21முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் கோவை மாவட்ட மின் சாதன வர்த்தகர்கள், சானிடரி பொருட்கள் விற்பனையாளர்கள் சங்கத்தினர், வன் பொருள் விற்பனையாளர்கள் சங்கம், பைப் வணிகர்கள் சங்கம் என பல சங்கங்களின் புதிய புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தப்படும்.

இந்த கண்காட்சியில் மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம், டெல்லி, ஹரியானா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி மற்றும் இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் இருந்து விற்பனையாளர்கள் மற்றும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்த உள்ளோம்.

இந்த கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்படும். 30,000 பேர் பார்வையாளர்களாக கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த கண்காட்சி மூலமாக 200 கோடி ருபாய் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள்  கூறினர்.

தலைப்புச்செய்திகள்