Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீ விபத்து, பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்: புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லுாரியில் ஏற்பாடு

பிப்ரவரி 20, 2020 12:40

துறையூர்: திருச்சி மாவட்டம், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லுாரி ரோட்ராக்ட் கிளப்,  துறையூர் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறை  இணைந்து தீ விபத்து மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நேரு நினைவு கல்லுரி மூக்கபிள்ளை கலையரங்கில் நடைபெற்றது.

சிறப்பு விருத்தினராக பங்கேற்ற தமிழ்நாடு தீயணைப்பு,  பாதுகாப்புத் துறை அறிவழகன், துறையூர் நிலைய அதிகாரி மற்றும் பாலசந்தர் தீ விபத்து மற்றும் பாதுகாப்பு குறித்து  சிறப்புரையாற்றினார். அதில் முதலுதவி மற்றும் தீவிபத்து  பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் அவசர காலங்களில் நம்மை எப்படி மீட்பது?, பாதுகாப்பு செய்வது குறித்த  ஒத்திகை நிகழ்த்தியை நடத்தி காட்டினர். முன்னதாக வேதியியல் துறை பேராசிரியர் மற்றும் ரோட்ராக்ட் கிளப்  அமைப்புச் செயலாளர்  முனைவர் M.ரமேஷ்  வரவேற்றார்.

இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் A.R.பொன்.பெரியசாமி தலைமை வகித்து பேசினார். கல்லூரி குழுத்தலைவர் பொன்.பாலசுப்ரமணியம் மற்றும் செயலர் பொன்.ரவிச்சந்திரன் வாழ்த்தி பேசினர். இவ்விழாவில் 850க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட ஆசிரியரல்லாத ஊழியர்களும் கலந்து கொண்டனர்.பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. விழா முடிவில் ரோட்ராக்ட் கிளப் செயலர்  மூன்றாம் ஆண்டு வேதியியல் துறை மாணவி காயத்ரி  நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்