Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாசிவராத்திரி குத்துவிளக்கு பூஜை

பிப்ரவரி 22, 2020 02:26

திருச்சி: மணப்பாறையில் சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் குத்துவிளக்கு பூஜை திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் பளுவஞ்சி கிராமம் அகிலாண்டேஸ்வரி உடனுறை அகதீஸ்வரர் ஆலயத்தில் மாசி மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஐந்து கால சிறப்பு அபிஷேக ஆராதனைகள்  கோமாதா பூஜை  அக்கி தவம் ஆகியவை நடைபெற்றது. 

இத்திருத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ள சிவாலயம் சிறப்பு பெற்றது. இரவு ஆலய வளாகத்தில் 1108 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்ட குத்துவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் தொன்மை வாய்ந்த பாண்டியர் கால செளந்தரநாயகி உடனுறை அகஸ்தீஸ்வரர் திருக்கோயிலில் சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்கள் கலந்துகொண்ட குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குமரவாடி பொய்கைப்பட்டி ஜமீன்தார் கே.ஆர்.கெ.முத்துவீரலெக்கையா நாயக்கர்  இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்  ஊர் நாட்டாமை வஜ்ரவேல்  இறைசேவகர் கரு.ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர். அதேபோல் மகிழாம்பிகை உடனுறை நாகநாத சுவாமி ஆலயத்திலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

தலைப்புச்செய்திகள்