Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை வங்கி அதிகாரி வழக்கு திருச்சி போலீசாருக்கு மாற்றம்

பிப்ரவரி 22, 2020 02:39

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). இவர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கேஷியராக பணிபுரிந்து வந்தார்.

இவர் தஞ்சை கள்ளப் பெரம்பூர் வகாப்நகரை சேர் ந்த தாட்சர் (32) என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந்தேதி திருமணம் செய்தார். இந்த நிலையில் எட்வின் ஜெயக்குமாருக்கு பலபெண்களுடன் தொடர்பு இருந்ததால் இரவில் அவர்களுடன் செல்போனில் பேசி மகிழ்ச்சியாக இருந்து கொண்டு தன்னை ஜெயக் குமார் கண்டு கொள்ளாமல் இருப்பதாக மனைவி தாட்சர் கடந்த ஜனவரி 29-ந் தேதி தஞ்சை வல்லம் போலீசில் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரில் கணவர் எட்வின் ஜெயக்குமார் அவரது தாயார்  சித்தி  தாயாரின் தோழி  ஜெயக்குமாருடன் பணியாற்றும் வங்கி ஊழியர் தேவிபிலோமினா உள்பட 5 பேர் மீது வல்லம் போலீசார் கடந்த 7-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்ய தேடி வந்தனர். எட்வின் ஜெயக்குமார் பல பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை வரதட்சணை கேட்டு மிரட்டுவதாகவும்  கொன்று விடுவதாக கொலை மிரட்டல் செய்ததாகவும் புகாரில் கூறியிருந்தார். 

போலீசார் வழக்கு பதிவு செய்து தங்களை கைது செய்ய தேடுவதை அறிந்ததும் எட்வின் ஜெயக் குமார் உள்ளிட்ட 5 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிலையில் ஜெயக்குமார் திருச்சியில் பதுங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அவர் திருச்சியில் எங்கு உள்ளார் என்பதை போலீசார் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஜெயக் குமாரின் உறவினர்கள் திருச்சி  ஸ்ரீரங்கம்  சமயபுரம் சொந்த ஊரான மணப்பாறை உள்ளிட்ட இடங் களில் உள்ளனர்.

இதனால் திருச்சியில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே எட்வின் ஜெயக்குமார்  தாட்சருடன் திருமணமானது முதல் வாழ்ந்த சில நாட்கள் மணப்பாறையில் உள்ள வீடாகும். அவர்கள் வீடு மணப்பாறை பஸ் நிலையம் அருகில் உள்ளது. தாட்சருக்குஅவர் செய்த சித்ரவதை மிரட்டல் போன்ற சம்பவங்கள் நடந் தது மணப்பாறை வீடு என்பதால்  இந்த வழக்கு மணப் பாறை மகளிர் போலீசாருக்கு மாற்றப்படுகிறது.

இதற்கான உத்தரவை தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன்   பிறப்பித்துள்ளார். திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் இந்த வழக்கு விபரங்கள் வந்ததும் மணப்பாறை போலீ சாருக்கு அனுப்பி வைப்பார். அதன் பிறகு விசாரணை மீண்டும் தொடங்கும். இந்த வழக்கு திருச்சி போலீசாருக்கு மாற்றப்பட் டுள்ளது புகார் கொடுத்த தாட்சர் தரப்பினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

விசாரணைக்காக அவர்கள் தஞ்சையில் இருந்து மணப்பாறைக்கு வந்து செல்ல வேண்டும் என்பதாலும் எட்வின் ஜெயக்குமார் உறவினர்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்பட லாம் என்பதாலும் அச்சத்தில் உள்ளனர். வல்லத்தில் இருந்து வழக்கு மாற்றப்பட்டு ள்ளதால் இந்த சம்பவத்தில் திருப்பம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்