Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாகை கடலூரில் பெட்ரோல் மண்டலம் அரசாணை ரத்து: தமிழக அரசு அறிவிப்பு

பிப்ரவரி 22, 2020 02:40

நாகை: கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. தமிழக அரசின் மாநில நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி கழகம் சார்பில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ள 45 ஊராட்சிகளை உள்ளடக்கிய 23 ஆயிரம் ஹெக்டேரில் (57500 ஏக்கர்) ரூ.92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய பொருள்கள் உற்பத்திக்கான முதலீட்டு மையம் அமைக்க என மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டது.

இப்பகுதிகளில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.1146 கோடியை ஒதுக்கிஇ பெட்ரோலியம்  ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. பெட்ரோலிய பொருள்களைச் சுத்திகரிக்க தொழிற்சாலைகள் அமைத்துஇ ஏற்றுமதி செய்ய அருகிலேயே சிறு துறைமுகங்களும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

இந்தத் திட்டத்துக்கு மாநில அரசின் அனுமதியைப் பெற மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டே ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. இதற்கு தமிழக அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஒப்புதல் அளித்து மேற்கண்ட இடத்தை தேர்வு செய்து 2017-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி அரசாணை வெளியிட்டது. தற்போது இந்த அரசாணையை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்