Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விசா பிரச்சினை குறித்து டிரம்புடன் மோடி பேசவேண்டும்

பிப்ரவரி 24, 2020 09:25

புதுடெல்லி: எச்-1பி விசா பிரச்சினை குறித்து டிரம் புடன் பிரதமர் மோடி பேச வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து உள்ளது.
2 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியா வந்தார். டெல்லியில் அவரும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசுகிறார்கள்.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

அமெரிக்காவில் பணியாற்ற செல்வோருக்காக வழங்கப்படும் 85 ஆயிரம் எச்-1பி விசாக்களில் 70 சதவீதத்தை இந்தியர்கள் பெறு கிறார்கள். அமெரிக்க அரசு குடியு ரிமை தொடர்பான கொள் கைகளை கடுமையாக்கி இருப்ப தால், தகவல் தொழில்நுட்ப துறை யில் பணியாற்றுவோர் எச்-1பி விசா பெறுவது பெரிதும் பாதிக்கப் பட்டு உள்ளது. 2015-ம் ஆண்டில் 6 சதவீதமாக இருந்த விசா நிராக ரிப்பு, 2019-ம் ஆண்டில் 24 சதவீத மாக அதிகரித்து விட்டது.

எனவே பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்திக்கும் போது எச்-1பி விசா பிரச் சினை குறித்து பேசவேண்டும். எச்-1பி விசா நடைமுறையை எளிமை யாக்குமாறு கேட்டுக்கொள்ள வேண்டும். அமெரிக்கா விதித்துள்ள தடை யால் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப் பட்டு இருப்பதால், இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண் ணெய் கிடைப்பதை உறுதி செய்யு மாறு டிரம்பை மோடி கேட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆனந்த் சர்மா கூறு கையில், மோடி-டிரம்ப் பேச்சு வார்த்தையில் இந்தியாவுக்கு சாதக மாக பெரிய அளவில் எதுவும் நடந்து விடுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறினார். பாதுகாப்பு, விண்வெளி ஆய்வு, அணுசக்தி துறைகளில் ஒத்து ழைப்பை நீடிப்பது போன்ற வழக்க மான அம்சங்கள் பேச்சுவார்த்தை யில் இடம்பெறும் என்று நம்புவ தாகவும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்