Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாஸ்டேக் தவறாக பயன்படுத்தியதால் ரூ.20 கோடி அபராதம் வசூல்

பிப்ரவரி 24, 2020 09:29

புதுடெல்லி: ‘பாஸ்டேக்’ வழியில் தவறுதலாக வரும் வாகனங்க ளுக்கு இந்தியா முழுவதும் இதுவரை 18 லட்சம் வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.20 கோடி அபராதம் வசூலிக் கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில், ‘பாஸ்டேக்’ முறையில் கட்ட ணம் வசூலிக்கும் முறையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக மத்திய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ பயன் படுத்துவோருக்கு என தனி வழியும், சாதாரண முறையில் சுங்க கட்டணம் செலுத்துவோருக்கு தனி வழியும் உள்ளது.

இதில் ‘பாஸ்டேக்’ வழியில் தவறுத லாக வரும் வாகனங்களுக்கு அபராத மாக இருமடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்படி இந்தியா முழுவதும் இதுவரை 18 லட்சம் வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.20 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளதாக மத் திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்