Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீ சக்தி பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ் மன்ற அகத்தியம் விழா கோலாகலம்

பிப்ரவரி 24, 2020 09:44

கோவை: ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் ஸ்ரீ சக்தி தமிழ் மன்றத்தின் "அகத்தியம்" விழா கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.
கோவை சின்னியம்பாளையம் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஸ்ரீ சக்தி தமிழ் மன்றத்தின் " அகத்தியம்" விழா கல்லூரியில் நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் பங்கேற்று சிறப்புறையாற்றினார். மேலும் இந்த போட்டியில் 40 கல்லூரிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டனர். மேலும் "அகத்தியம்" திருவிழாவில் கல்லூரி மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்க பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

 மேலும், "திமிர் தீப்பந்தம்" எனும் பேச்சுப்போட்டி, சங்கீத கீதை என பாடல் போட்டி, ஓவியர்களுக்கு வண்ணச்சாயம் போட்டி, நுணிவிரல் முத்தமிழ் எனும் கவிதைப்போட்டி, சடுகுடு போட்டி, கட்டுரை போட்டி மற்றும் நடனப்போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

மேலும் இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் நாம் தமிழர் கட்சி சீமான் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். இவ்விழாவில் கல்லூரி தலைவர் தங்கவேலு, இணை செயலாளர் சீலன் தங்கவேலு, கல்லூரி முதல்வர் பிரகாஷ், மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தலைப்புச்செய்திகள்