Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு: 2 குற்றவாளிகள் மேல்முறையீடு 

பிப்ரவரி 24, 2020 10:18

சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனையை எதிர்த்து மேலும் இரண்டு பேர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட லிப்ட் ஆபரேட்டர் தீனதயாளன், வீட்டு பணியாள் ஜெயராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

சென்னை அயனாவரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணையின் போது பாபு என்பவர் இறந்துவிட்டதால், மீதமுள்ள 16 பேர் மீதான வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கில் பிப்ரவரி 3ம் தேதி தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் குணசேகரன் என்பவரை விடுதலை செய்தது.மீதமுள்ள 15 பேரில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி கோரி 5 ஆண்டு சிறை சிறை தண்டனை விதிக்கப்பட்ட உமாபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதேபோல் லிப்ட் ஆபரேட்டர் தீனதயாளன், வீட்டு பணியாள் ஜெயராமன் ஆகியோரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தங்களுக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் இல்லை என்பதால், தண்டனையை நிறுத்தி வைத்து தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இருவரும் தங்கள் மனுக்களில் கோரியுள்ளனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க அயனாவரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டது.

தலைப்புச்செய்திகள்