Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு ஊழியர்கள் அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும்

பிப்ரவரி 27, 2020 10:39

சென்னை: அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம் என்றும் அணியாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் தங்கள் பணி நேரத்தில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டைகளை அணிவதில்லை என்று புகார்கள் வந்தன. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு 16.7.2018 அன்று வழங்கிய தீர்ப்பில், அரசு ஊழியர்கள் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

என்றாலும் அரசு ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நேரத்தில் அடையாள அட்டைகளை அணிவதில்லை என்று புகார்கள் வந்தன. இது அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு செயலாளர் சுவர்ணா, அரசு துறை தலைவர்கள், மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், ‘அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிவது கட்டாயம்.

பணி நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணியாதவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்