Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காலமுறை ஊதியம் வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 28, 2020 07:23

திருச்சி: பணி நிரந்தரம்  காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநில பொருளாளர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் பிச்சைமுத்து வரவேற்றார்.

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து  காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்  பணிப்பதிவேடு மற்றும் பணி விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.21 ஆயிரம் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் ஓய்வு பெறும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிக்கொடையாக குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்கப்பட வேண்டும்.

டாஸ்மாக் நிறுவனத்தில் 500 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பியது போக மீதம் காலியாக உள்ள பணியிடங்களை ஏற்கனவே நடத்திய தேர்வின் அடிப்படையில் நிரப்ப வேண்டும்  ஒரு மாவட்ட மேலாளர் இன்னொரு மாவட்டத்திற்கு சென்று ஆய்வு செய்தல் மற்றும் ஆதாயங்களுக்காக மட்டுமே நடத்தப்படுகின்ற ஆய்வுகளை ரத்து செய்ய வேண்டும்  மதுபான கடையும்  மதுபான கூடமும் ஒரே இடத்தில் இயங்கக்கூடாது மதுபான நிர்வாகத்தில் பார் ஒப்பந்ததாரர்கள் தலையிடாத வகையில் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் பி.கே.சிவகுமார்  கோவிந்தராஜ் உள்பட மாநில நிர்வாகிகள் கண்ணன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். முடிவில் மாவட்ட பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்