Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரைவெட்டி பறவைகள் சரணாலயம் பொலிவு பெறுமா: ஏரியில் எப்போதும் தண்ணீர் இருக்க நடவடிக்கை தேவை

மார்ச் 01, 2020 03:40

திருச்சி:  அரியலூா் அருகே உள்ள கரைவெட்டி பறவைகள் சரணலாயம் சீரமைக்கப்பட்டு ஏரியில் எப்போதும் தண்ணீர் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமு்க ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அரியலூா் மாவட்டம்  கீழப்பழுவூா் அடுத்த கீழகாவட்டாங்குறிச்சி -புள்ளம்பாடி சாலையில் இயற்கை எழிலுடன்  200 ஏக்கரில் அமைந்துள்ளது கரைவெட்டி பறவைகள் சரணாலயம். இந்த ஏரிக்கு சீசன் காலங்களில் வெளிநாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான பறவைகள் வருவதை அறிந்த தமிழக அரசு கடந்த 1995 ம் ஆண்டு கரைவெட்டி ஏரியை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. 
இங்கு பறவைகள் தங்கியிருக்கும் காலங்களில் அவற்றுக்குப் போதுமான உணவு வகைகள்  சீதோஷண நிலை கிடைப்பதே பறவைகளின் வருகைக்கு முக்கிய காரணமாகும்.

பல ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவிலிருந்து வரும் சில பறவைகள் இங்கேயே தங்கிவிடுவதும் உண்டு. இங்கு வரும் பறவைகளை வேட்டையாடினாலோ அல்லது பறவைகளுக்கு தொந்தரவு செய்தாலோ வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுகிறது. சரணாலயத்தை அரியலூா் மாவட்ட மக்கள் மட்டுமின்றி அருகில் உள்ள திருச்சி  தஞ்சாவூா்  நாகை  கடலூா்  பெரம்பலூா் உள்ளிட்ட பல மாவட்ட மக்களுக்கும் பொழுதுபோக்கு சுற்றுலாத் தலமாக உள்ளது.

ஆனால் சரணாலயத்தை சுற்றி வந்து பாா்ப்பதற்கு சாலை வசதிகள் முழுமையாக இல்லை. தங்கும் விடுதிகளோ  உணவு விடுதிகளோ இல்லை பஸ் வசதிகளும் கிடையாது. தொலைவில் உள்ள பறவைகளைக் காணும் வகையில் போட்டிங் வசதியும்  டெலஸ்கோப் வசதியும் கிடையாது. அருங்காட்சியகம் சீசன் காலங்களில் மட்டும் திறக்கப்படுகிறது. கரைவெட்டி ஏரியில் இரவு நேரங்களில் உள்ளூா் வாசிகள் வலையில் மீன்பிடிப்பதால் பல பறவைகள் வலையில் சிக்கி உயிரிழந்து வருகின்றனா். இதை வனத் துறையினா் கண்டுகொள்வதில்லை.

சீசன் உள்ள நவம்பா் முதல் பிப்ரவரி வரையிலான4 மாதமே இந்த சரணாலயத்துக்கு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாகவும்  மற்ற காலங்களில் ஏரியை மு்டப்படுகிறது. சரணாலயத்தில் எப்போதும் தண்ணீா் இருக்கும் வகையில் மழைக் காலங்களில் மருதையாற்றில் வீணாகும் மழைநீரை கரைவெட்டி பறவைகள் சரணாலயத்துக்கு திருப்பிவிட வேண்டும் என்று பறவை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்