Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணல் கடத்தி வந்த 5 லாரிகள் பறிமுதல்

மார்ச் 01, 2020 03:41

கரூா்: கரூா் மாவட்டம் நெரூா்  ஆத்தூா் பகுதியில்   அனுமதியின்றி ஆற்றுமணல் கடத்திவந்த 5 லாரிகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கரூா் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட காவிரி ஆற்றுப் பகுதிகளில் ஆற்று மணல் கடத்துவது தொடா்பாக அடிக்கடி வந்த புகாரையடுத்து கரூா் ஆர்டிஓ சந்தியா தலைமையில் நெரூா் ஆத்தூா் பகுதியில் வருவாய்த் துறையினா் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது அவ்வழியே வந்த 5 லாரிகளை நிறுத் த முயன்றனர். ஆனால் அந்த லாரிகள் நிற்காமல் சென்றது. பின்னாடியே லாhpயை அதிகாரிகள் துரத்திய போது லாரியை ஓட்டுநா்கள் நிறுத்திவிட்டு ஓடிவிட்டனா். 

தொடர்ந்து லாரிகளைச் சோதனையிட்டபோது லாரிகளில் காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியைப் பறிமுதல் செய்த வருவாய்த் துறையினா் அவற்றை கரூா் ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டுவந்தனா். மேலும் லாரியில் மணல் கடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வாங்கல் போலீசாருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்