Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிளிப்கார்ட் நிறுவனர் சச்சினிடம் விசாரணை

மார்ச் 07, 2020 08:22

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் சச்சின் பன்சால் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவரது மனைவி பிரியா அளித்த புகாரின் பேரில் பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

கடந்த 2007-ம் ஆண்டு சச்சின் பன்சாலும், பென்னி பென்சாலும் இணைந்து பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிளிப் கார்ட் நிறுவனத்தை தொடங்கினர். இணையவழியாக பொருட்கள் விற்பனை செய்யும் வலைத்தளமான பிளிப் கார்ட் குறுகிய காலத்தில் மிக வேகமாக வளர்ச்சியடைந்தது. இதனால் சச்சின் பென்சாலின் கடந்த 12 ஆண்டு வருமானம் பல நூறு கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் அவரது மனைவி பிரியா, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கோரமங்களா காவல் நிலையத்தில் சச்சின் பன்சால் மீது வரதட்சணை புகார் அளித்தார். அதில், சச்சின் பன்சாலும், அவரது குடும்பத்தினரும் தன்னிடம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார்.
இதன்பேரில், கோரமங்களா போலீஸார் சச்சின் பன்சால், அவரது தந்தை சத்ய பிரகாஷ், தாய் கிரண் பன்சால், சகோதரர் நிதின் பன்சால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்