Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு பள்ளியில் மாதிரி தேர்தல்: வெற்றி பெற்ற மாணவர் பிரதமராக பதவி ஏற்று திட்டம் தீட்டி அசத்தல்

மார்ச் 07, 2020 08:26

திருச்சி: 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்த அரசு பள்ளியில் மாதிரி தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர் பிரதமராக பதவி ஏற்று திட்டம் தீட்டி அசத்தினார். 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்குப் பதிவு செய்து தங்களது ஜனநாயக கடமை யை ஆற்ற வேண்டும்  100 சதவீத வாக்குப் பதிவை எட்ட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டம்  மணப்பாறையை அடுத்த சமுத்திரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில்  தலைமை ஆசிரியர் ராஜசேகரன் தலைமையில் பாராளுமன்ற மாதிரி தேர்தல் நடைபெற்றது.

இதற்காக பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறை வாக்குச்சாவடி மையமாக மாற்றப்பட்டது. வழக்கமாக நடைபெறும் தேர்தல்போல அங்கு வாக்குச் சாவடி அலுவலர்கள்  முகவர்கள் என மாணவர்களே அமர்ந்தி ருந்தனர். வாக்களிக்க  மாணவர் அடையாள அட்டை பயன்படுத்தப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு 1.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

தேர்தலில் மொத்தம் 9 மாணவ-மாணவிகள் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர். இதையடுத்து வழக்கமாக தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அதில் தேர்தலில் போட்டியிட்ட 9 வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொறுத்தப்பட்டது.

மாணவ-மாணவிகள் தனித்தனியாக வரிசையில் நின்று ஒவ்வொருவராக சென்று வாக்களித்தனர். இதில்  நிஜ தேர்தலில் உள்ள அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப் பட்டன. வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் பிரதமர்  5 அமைச்சர்கள்  3 எதிர்கட்சியினர் என தேர்வு செய்யப் பட்டனர். பின்னர் வாக்கு எண்ணும் அறை அடைக்கப்பட்டு வேட்பாளர்களாக களத்தில் இருந்த மாணவ-மாணவிகள் வரவழைக்கப் பட்டு பதிவான வாக்குகள் சரியாக உள்ளதா  என்று அவர்களிடம் காண்பிக்கப்பட்டு வாக்கு எந்திரம் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் கருவி ஆகியவற்றிற்கு சீல் வைக்கப்பட்டது. சற்று நேரத்திற்கு பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி மாரியம்மாள் 98 வாக்குகள் பெற்று பிரதமராகவும்  செந்தமிழ்செல்வி 41 வாக்குகள்  கவிமதி 23 வாக்குகள்  லோகேஸ்வரி 21 வாக்குகள்  செல்வகணபதி 17 வாக்குகள்  பஜீருல்லா 9 வாக்குகள் பெற்று அமைச்சர்களாகவும்  கனகப்பிரியா 8 வாக்குகள்  ஜெயஸ்ரீ 3 வாக்குகள்  சர்மிளா ஒரு வாக்கு பெற்று எதிர்கட்சியை சேர்ந்தவர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். நோட்டாவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. தேர்தல் பார்வையாளர்களாக ஊனையூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சற்குணன்  ஓந்தாம்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் சார்லஸ் ஆகியோர் இருந்தனர்.

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கான பதவியேற்பு விழா விமரிசையாக நடைபெற்றது. அவர்கள் பிரதமர் மற்றும் அமைச்சர்களாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் மாதிரி பாராளுமன்றம் கூடியது. அப்போது தமிழ் இந்திய ஆட்சி மொழியாக அறிவிக்கப்படுவதாகவும்  காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை மணப்பாறை பகுதி முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும்  ஆசிரியர் பணி உயர்நீதிமன்ற நீதிபதியின் பணிக்கு இணையாக மதிக்கப்படும்  மது  புகையிலை இந்தியா முழுவதும் தடை செய்யப்படும்  இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி முறை அமல்படுத்தப்  படுவதோடு அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேர்தலின்போது வாக்குச்சாவடி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதுபோல இங்கு பாதுகாப்பு பணியில் என்.சி.சி. மாணவர்கள் ஈடுபட்டனர்.

தலைப்புச்செய்திகள்