Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை அமைக்கும் பணி மும்முரம்

மார்ச் 08, 2020 11:32

திருச்சி: திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ழுணிகளை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.

மேட்டூர் அணை முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியதன் காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி  மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் தண்ணீர் வெள்ளம்போல கரைபுரண்டு ஓடி  திருச்சி முக்கொம்பு மேலணையை அடைந்தது. அங்கிருந்து காவிரி ஆற்று நீர் கல்லணை நோக்கியும்  உபரிநீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்பட்டது. 

இந்த நிலையில் ஆகஸ்டு 22-ந் தேதி கொள்ளிடம் ஆற்றின் தெற்கு கதவணையில் 9 மதகுகள் உள்ள பகுதி உடைந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு தற்காலிக தடுப்பணை மற்றும் கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணை கட்டுவதற்கு ரூ.387 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். 

இதற்கான பணிகள் கடந்த ஆண்டு (2019) அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கியது. கொள்ளிடம் ஆற்றில் வடக்குஇ தெற்கு ஆறுகளின் குறுக்கே 40-க்கும் மேற்பட்ட மதகுகள் அமைக்கப்பட வேண்டும். இந்த நிலையில் முக்கொம்பில் புதிய கதவணை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது்-

முக்கொம்பில் தெற்கு பகுதியில் புதிய கதவணை அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக நடைபெற்று வருகின்றது. மேலும்  ஷட்டர்கள் அமைக்கும் பணிகள் மேல்தளத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 ஷட்டர்கள் தேவைப்படுகிறது. அதில் தற்போது 40 ஷட்டர்கள் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இப்பணிகள் அனைத்தும் கூடிய விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
மற்ற கட்டுமானப் பணிகள் அனைத்தையும் அடுத்த ஆண்டு (2021) ஜனவரிக்குள் முடித்திட வேண்டும் என ஒப்பந்த நிறுவனத்திற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 

இந்த ஆய்வின்போது நடுகாவேரி வடிநில கண்காணிப்புப் பொறியாளர் திருவேட்டை செல்வம்  ஆற்றுப்பாதுகாப்புக் கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கர் உதவி செயற்பொறியாளர் ஜெயராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்