Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பதவி நாற்காலிக்கு ரஜினி ஆசைப்பட்டவர் அல்ல: கரூரில் அர்ஜூன்சம்பத் பேட்டி

மார்ச் 09, 2020 04:25

கரூர்: ரஜினி எப்போதும் பதவி நாற்காலிக்கு ஆசைப்பட்டவர் அல்ல என்று கரு்ரில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத்  கூறினார்.
கரூரில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன்சம்பத் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது்-

கரூர் மாவட்டத்தில் திருக்கோவில்களுக்கு சொந்தமான ஏராளமான சொத்துக்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. அவற்றை மீட்க வேண்டும். இது தொடர்பாக இந்துசமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே பட்டா போட்டு கொடுப்பது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அந்த உத்தரவை தடை செய்யக்கோரி நாங்கள் நீதிமன்றத்தை நாடி இடைக்கால தடையை பெற்றோம். எனவே தமிழக முதல்-அமைச்சர் இந்த விஷயத்தில்இ நடவடிக்கை எடுத்து கோவில் சொத்துக்களை பாதுகாக்க முன்வர வேண்டும். மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரான விஷம பிரசாரத்தினை குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சி.ஏ.ஏ.) எதிரான போராட்டங்களில் மேற்கொள்கின்றனர். 

எனவே சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டங்களை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும். தமிழகத்தில் அமைதி  நல்லிணக்கம் ஏற்பட முழுமுயற்சியை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்  இளைஞர்களுக்கு தேர்தலிலே வாய்ப்பு அளிப்பது பிரதிபலன் எதிர்பாராமல் நிர்வாகிகள் செயலாற்றுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்ததாக கூறுகிறார்கள். 

ரஜினி எப்போதும் பதவி நாற்காலிக்கு ஆசைப்பட்டவர் அல்ல. அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என சிந்திப்பவர் அவர். அது தான் ஆன்மிக அரசியல் கொள்கை. ரஜினிகாந்த் தான் அடுத்த முதல்-அமைச்சராக வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அர்ஜூன்சம்பத் கூறினார்.

தலைப்புச்செய்திகள்