Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் காய்கறி விலை மலிவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

மார்ச் 12, 2020 10:08

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி விலை மலிந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்தசில மாதங்களுக்கு முன் வெங்காயம் விலை ரூ.100லிருந்து ரூ.200 வரை விற்றதால் பெண்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்தது. விலையை கட்டுப்படுத்த எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் கொண்டு வரப்பட்டது. 

ருச்சி காந்திமார்க்கெட்டில் இந்த வெங்காயம் விற்கப்பட்டது. கையெறி குண்டு போல இருந்த இந்த வெங்காயத்தை பெண்கள் வாங்க ஆர்வம் காட்ட வில்லை. அதன் பின்னர் நாட்டு வெங்காயம் வரத்து அதிகரித்ததால் வெங்காயத்தின் விலை படிபடியாக குறைந்தது.

திருச்சி காந்திமார்க்கெட்டில் இன்று நல்ல தரமான பெரியவெங்காயம் கிலோ ரூ.20க்கும், சின்னவெங்காயம் ரூ.40 க்கும் விற்கப்பட்டது. இந்த வெங்காயம் கடந்த 2 மாதங்களுக்கு முன் ரூ.200 வரை விற்பனையானது குறிப்பிடதக்கது. அதே போன்று ரூ.200க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் இன்று ரூ.30க்கு விற்பனையானது. அது மட்டுமல்லாமல் தக்காளி ரூ.8, நாட்டுகத்தரிக்காய் ரூ.10, அவரைக்காய் ரூ.20, பாகற்காய் ரூ.20, வெண்டைக்காய் ரூ.15, சுரைக்காய் ரூ.10, பச்சை மிளகாய் ரூ.20, பின்ஸ் ரூ.20, கேரட் ரூ.25, முட்டைக்கோஸ் ரூ.10, பீட்ரூட் ரூ.10 என மலிவுவிலையில் விற்கப்பட்டது.  மலிவு விலையில் காய்கறி கிடைத்ததால் இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுபற்றி காய்கறி வியாபாரி குமரகுரு கூறியதாவது: மழை நன்கு பெய்து காய்கறிகள் விளைச்சல் அதிகமானதால் அனைத்து காய்கறிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்துள்ளது. பண்டிகைகள் விஷேசங்கள் இல்லாததால் காய்கறியின் விற்பனை குறைவாக உள்ளது. இருப்பினும் கால் கிலோ, அரை கிலோ என்று வாங்கியவர்கள் தற்போது கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்