Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுக, காங்கிரஸ், திக, விடுதலை சிறுத்தைகள் தேச விரோதிகள்: ஹெச் ராஜா

மார்ச் 14, 2020 01:59

கும்பகோணம்: 

கும்பகோணத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

குடியுரிமை சட்டத் திருத்தத்தில் யாரிடமிருந்தும் எவ்வித ஆவணமும் கேட்கப்படாத நிலையில், சட்டவிரோதமாக இந்தியாவில் குடியிருப்பவர்களுக்கு ஆதரவாக இஸ்லாமியர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் நியாயமற்றது, 

உடனடியாக இவர்கள் போராட்டங்களை கைவிட வேண்டுமென  கேட்டுக்கொண்ட அவர், இப்போராட்டத்தை தூண்டி விடும் திமுக, காங்கிரஸ், திக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளை  அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

இவர்கள் தேச விரோதிகள் என்றும் கூறிய எச். ராஜா , குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்றால் பெரும்பான்மை இந்துக்களின் வெறுப்பையும் எதிர்ப்புகளையும் அவர்கள் சம்பாதிக்க நேரிடும் என்றும் எச். ராஜா மேலும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்