Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா வைரஸ் எதிரொலி: தேனி மாவட்டத்துக்கு சீல்!

மார்ச் 16, 2020 09:43

தேனி: அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி தேனி மாவட்டத்தில் உள்ள மழலையர் பள்ளிகள் , துவக்கப்பள்ளிகள் (1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை), அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், சுற்றுலா தலங்கள் குறிப்பாக வைகை அணையின் பூங்கா,  கும்பக்கரை அருவி, மேகமலை, சின்னசுருளி மற்றும் சுருளி அருவியில் குளிக்கும் இடம்  வருகின்ற (31.03.2020) வரை மூடவும் உத்திரவிடபட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் துாய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், பொது இடங்களில் குறிப்பாக, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வருகை புரியும் மக்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களை கண்டறிந்து, அத்தகையோரை மக்கள் கூடும் இடங்களுக்கு வருவதைத் தடுக்க தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், குடும்ப விழாக்கள் நடைபெறும் இடங்களில் குறைந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களை வைத்து விழாக்கள் நடத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  ஏலக்காய் தோட்ட தொழிலாளர்களுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின்கீழ் வேலை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் தோட்டவேலைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே, தேனி மாவட்டத்திலுள்ள  பொதுமக்கள் மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்