Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பத்திரிகை கொடுக்க வந்தது போல நடித்து வியாபாரியை குத்திக்கொன்ற கும்பல்: நகை, பணம் கொள்ளை

மார்ச் 16, 2020 09:45

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலகாவிரி பாலம் அருகே உள்ள காவிரி கரையில் வசித்து வந்தவர் ராமநாதன்(வயது63). இவர் கும்பகோணம் சண்முகம் தெருவில் சமையல் எண்ணெய் மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி விஜயா. 

வீட்டில் ராமநாதனும், அவருடைய மனைவி விஜயாவும் இருந்தனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் பத்திரிகை கொடுப்பதற்காக வந்து இருப்பதாக கூறி வீட்டுக்குள் வந்தனர். இதையடுத்து மர்மநபர்கள் 5 பேரும் சேர்ந்து ராமநாதனை சரமாரியாக தாக்கி வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கேட்டுள்ளனர். அவர் நகை, பணம் தர மறுத்துள்ளார். பணம் தரவில்லை என்றால் உனது மனைவியை கொலை செய்து விடுவோம் என கூறி விஜயாவை வீட்டில் உள்ள ஒரு அறையில் அமர வைத்து விட்டு வந்தனர். அப்போது ராமநாதன் வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகளை எடுத்து வந்து மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளார்.

நகை, பணத்தை வாங்கி கொண்ட மர்ம நபர்கள் உன்னை விட்டால் போலீசாரிடம் எங்களை காட்டி கொடுத்துவிடுவாய் என கூறி அவர்கள் மறைத்து வைத்திருந்த கூர்மையான இரும்பு கம்பியால் ராமநாதன் கழுத்தில் குத்தினர். இதில் அவர் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அறையில் இருந்து விஜயா வெளியே வந்து பார்த்த போது ராமநாதன் பிணமாக கிடந்ததை கண்டு சத்தம் போட்டுள்ளார். இதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

தகவலறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் எஸ்.பி. மகேஸ்வரன், கும்பகோணம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ரமே‌‌ஷ்குமார், ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.  பின்னர் ராமநாதன் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்