Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய மக்களின் குடியுரிமையே கேள்விக்குறி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் அச்சம்

மார்ச் 16, 2020 09:46

கும்பகோணம்: “குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றாலும் இந்திய மக்களின் குடியுரிமையே கேள்விக்குறியாகி உள்ளது,” என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் அச்சம் தெரிவித்தார்
இதுகுறித்து கும்பகோணத்தி்ல் அவர் அளித்த பேட்டி:

ஒன்றோடு ஒன்று தொடர்புடைய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றாலும் இந்திய மக்களின் குடியுரிமையே கேள்விக்குறியாகி உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம் சமயசார்பற்ற கொள்கைக்கு முரணானது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

சட்டத்துக்கு எதிராக எவ்வித தூண்டுதலும் இன்றி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இஸ்லாமிய அமைப்புகளை மட்டும் அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமான பிரச்சினை இல்லை. எனவே அனைத்து கட்சிகளையும் முதல்வர் அழைத்து பேச வேண்டும்.

மேலும் சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மதத்தை அடிப்படையாக வைத்து எந்த சட்டத்தையும் இயற்ற கூடாது. அப்படி இயற்ற வேண்டும் என்றால் இந்து நாடு என்று அறிவித்துவிட்டு செய்யலாம். இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமிய மக்களை நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள் என்பது தவறான பிரசாரம் ஆகும். இந்த சட்டம் எங்களை பாதிக்கவும் இல்லை. 

ஆனால், அரசியல் சட்டத்துக்கு முரணானது என்பது உண்மை. இதுபோன்ற சட்டத்தை ஏன் இயற்ற வேண்டும்? தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் அஸ்ஸாமில் மட்டும் போடப்பட்டுள்ள சட்டம். அதை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என தொடர்ந்து கூறி வந்த உள்துறை அைமச்சர் அமித்ஷா, தற்போது மற்ற மாநிலங்களுக்கு கிடையாது என கூறுகிறார். இதை தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்