Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டில் கிளா்ச்சியை உருவா க்கினால் கைது: பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலா் பேட்டி

மார்ச் 18, 2020 01:07

கரூர்: நாட்டில் வன்முறை  கிளா்ச்சியை உருவாக்குபவா்கள் மீது  தேச விரோத செயல் என்ற அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கரு்ரில் பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம் கூறினார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி விவரம் வருமாறு: குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் ஏற்படும் நன்மைகள் போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில் மார்ச் 20 முதல் ஏப்ரல் 5- ம் தேதி வரை ஊருக்குச் செல்வோம்- உண்மையைச் சொல்வோம் உரக்கச் சொல்வோம் என்ற நிகழ்ச்சியை நடத்த பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்தது. அதற்கான பயிற்சி முகாம் மாநிலம் முழுவதும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பாஜகவும் தனது நிகழ்ச்சியை மாற்றியமைத்துள்ளது. கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்திய பின்னா்  குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவோம்.
இஸ்லாமியா்களுக்கு சிறு பாதிப்புக் கூட ஏற்படாத வகையிலுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக  நாட்டின் பாதுகாப்பு மீது அக்கறை இல்லாமல் போராடுவோா் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக தலைவா் முக.ஸ்டாலின்  ஒத்துழையாமை இயக்கம் நடத்த வேண்டும் எனக் கூறுகிறாா். ஆங்கிலேயா் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தனா். அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட ஒத்துழையாமை இயக்கம் நடந்தது அது வேறு. நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்காக  பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்டது குடியுரிமைத் திருத்தச் சட்டம்.

இதற்கு ஒத்துழைப்பு கொடுக்காதீா்கள் எனக் கூறுவதை  இதை எதிர்ப்பதை தேச விரோத செயலாகத்தான் கருத வேண்டும். நாடாளுமன்றத்தில் அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிராக கிளா்ச்சியை  வன்முறையை உருவாக்குபவா்கள் யாராக இருந்தாலும்  அது ஸ்டாலினாக இருந்தாலும் அவா்கள் மீது தேச விரோத செயல் என்ற அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கருப்பு முருகானந்தம் கூறினார். கோட்ட அமைப்புச் செயலா் பெரியசாமி மாவட்டத்தலைவா் கே.சிவசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனா்.
 

தலைப்புச்செய்திகள்