Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல்வர் நாற்காலிக்கு ரஜினி ரெடி: ஆதரவாளர்கள் நம்பிக்கை

மார்ச் 18, 2020 02:03

சென்னை: முதல்வர் நாற்காலியில் ரஜினி உட்காரதான் போறார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து  தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக சில தலைவர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அதில் முக்கியமானவர்கள்தமிழருவி மணியன், திருநாவுக்கரசர், செ.கு. தமிழரசன், கராத்தே தியாகராஜன் ஆவர். 

தமிழக அரசியலை பொறுத்தவரை உங்க முகத்திற்குதான் மக்கள் ஓட்டு போடுவாங்க. நீங்க சுட்டிக்காட்டும் நபரை ஏற்பார்களா என்பது சந்தேகம்தான். அரசியல் மாற்றம் உங்களிடமிருந்து துவங்க வேண்டுமென்பதுதான் எல்லாருமே எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் அதிகாரம் உங்ககிட்டதான் இருக்கணும். யாரையோ ஒருத்தரை முதல்வராக்கினால், அவர் என்ன தப்பு செய்தாலும் அது உங்களைதான் பாதிக்கும். இதுவே முதல்வராக நீங்கள் உட்கார்ந்தால், எல்லாரும் பயப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதில், திருநாவுக்கரசர் மட்டும் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ரஜினி லீலா பேலஸில் 3 திட்டங்களையும் எடுத்து வைத்தார். எதிர்பார்த்த அளவுக்கு ரஜினியின் கருத்துக்கு வரவேற்பும் இல்லை. இதையடுத்து தன் நிலைப்பாட்டில் விரைவில் பல்டி அடிக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தானே முதல்வராக பதவியில் உட்காருவார் என்றும் கணிக்கப்படுகிறது.

இதுகுறி்த்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: அவர்தான் சி.எம். ஆவாரு பாருங்க. பெருவாரியான மக்கள் ரஜினியே முதல்வராக வேண்டும் என்று விரும்புகின்றனர்.  நடக்கிற அதிருப்தி, சர்ச்சை, எதிர்ப்புகளை பார்த்து எப்படியும் ரஜினியே பல்டி அடிச்சிடுவார். தான்தான் முதல்வர் என்றும் சொல்லவும் போகிறார்.

இதற்கேற்றபடி ஆங்கில நாளிதழுக்கு தமிழருவி மணியன் அளித்த பேட்டியில், "ரஜினி முதல்வராகும் வாய்ப்பை நிச்சயம் பெறுவார். அவர் அரசியலுக்குள் நுழைந்த பிறகு அவரோடு கைகோர்க்க ஏராளமான மக்கள் விரும்புகிறார்கள். வேறு ஒருவரை முதல்வராக முன்னிறுத்த போவதாக ரஜினி சொல்லி உள்ளது அவருடைய தனித்தன்மையை காட்டுகிறது. ரஜினிக்கு லட்சக்கணக்கான ஆதரவாளர்ளும், ரசிகர்களும் இருந்தும்கூட அவர் முதல்வர் நாற்காலி மீது விருப்பம் இல்லை என்று சொல்வது ரஜினியின் பெருந்தன்மை. ஆனால் ரஜினி முதல்வராகும் வாய்ப்பை பெறுவார் என்று கூறியிருக்கிறார்.

தலைப்புச்செய்திகள்