Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை: திருச்சி அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு

மார்ச் 19, 2020 11:41

திருச்சி: அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலம் சார்பில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனா தடுப்புக்கு தமிழக முதலமைச்சர் பல்வேறு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் பேருந்துகளுக்கு கிருமிநாசினி ஸ்ப்ரே அடித்தும், நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு  கொரோனா  தடுப்பு  நடவடிக்கைகள்  குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 

அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டலம் பொது மேலாளர் ராஜ்மோகன் தொழிலாளர்கள் மத்தியில்  பேசியதாவது:
அனைத்து பணிமனைகளிலும் உள்ள கழிவறைகள் , ஓய்வறை மற்றும் உணவகம் ஆகிய இடங்களில் கிருமி ஒழிப்பு லைசால் மருந்து தினமும் தெளிக்கப்படுகிறது.அனைத்து கிளை உணவகங்களிலும் மஞ்சள் கலந்த சுடுதண்ணீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

திருச்சி மண்டலத்தில் அனைத்து பேருந்துகளையும் வெளியில் எடுத்துச் செல்லும்போது ஓட்டுநரும், நடத்துனர்களும் கை கழுவுவதற்கு சோப்பு வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் ஆகிய பேருந்து நிலையங்களில்  பணியாளர்கள் பணிபுரிவதற்கு    ஜாக்கெட், மாஸ்க், தொப்பி, கை உறை ஆகியவை வழங்கப்படுகிறது.

அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் வாஷ்பேஷன் வைத்து ஓட்டுநர், நடத்துனர்களுக்கு சோப்பு வழங்கி கை கழுவுவதற்கு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடத்துனர் பேருந்துகளில் பயண சீட்டு மற்றும் மீதி தொகை வழங்குவதற்கு விரல்களில் பசை பயன்படுத்த  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் சேர்ப்பதற்கு ஓட்டுநர், நடத்துநர் களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்  பேசினார்.

தலைப்புச்செய்திகள்