Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்: சிவகங்கை கலெக்டர் அழைப்பு

மார்ச் 20, 2020 04:46


சிவகங்கை: கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம்  சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. இதில் அவர் கூறியதாவது்: 

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக முழுமையாக கண்காணிப்பு  பணிகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை வெளிநாட்டில் இருந்து வந்த 124 நபர்களுக்கு காய்ச்சல் இருந்தது  கண்டறியப்பட்டு அவர்களுக்கு உயரிய சிகிச்சை வழங்கப்பட்டு 100 பேர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 24  பேர் மட்டும் மருத்துவக்குழு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா  வைரஸ் பாதிப்பு என்பது கிடையாது. கொரோனா வைரஸ் தடுப்பது என்பது பொது சுகாதாரத்துறைக்கு மட்டும் பொறுப்பல்ல. எல்லாத்துறைகளும்  ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே முழுமையாக தடுக்க முடியும். அந்த வகையில் ஒவ்வொரு துறையும்  பொது சுகாதாரத்துறையுடன் ஒருங்கிணைந்து திட்டமிட்டு செயல்பட வேண்டும். குறிப்பாக நகராட்சிஇ பேரூராட்சி  பகுதிகளில் தினந்தோறும் தூய்மை பணி மேற்கொண்டு சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். 

பேருந்துகளில் கிருமி நாசினி மருந்து கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வெளிநாட்டவர்  வரும்போது அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.  வெளியூரிலிருந்து யார் வந்தாலும் கிராம உதவியாளர்  கிராம நிர்வாக அலுவலர் கண்காணிக்க வேண்டும்.  அவர்களுக்கு காய்ச்சல்  இருமல் மூச்சுத்திணறல் இருந்தால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல்  தெரிவிக்க வேண்டும். 

24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டணமில்லா தொலைபேசி 1077 என்ற  எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு  அறை துவக்கப்பட்டுள்ளது என்றார். தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு  மேற்கொள்ளப்பட்டது.

தலைப்புச்செய்திகள்