Saturday, 21st September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐரோப்பிய நாடுகளில் ரூ 6000 கோடி நிலுவை தொகை: ரூ 2200 கோடி பின்னலாடைகள் தேக்கம்

மார்ச் 20, 2020 04:50

திருப்பூர்: ஐரோப்பிய நாடுகளில் 6000 கோடி நிலுவை தொகை உள்ளதாகவும்  2200 கோடி பின்னலாடைகள் தேக்கமடைந்துள்ளதாகவும் 
திருப்பூர் 18 பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்களின்  கூட்டு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பூர் பின்னலாடை துறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள்  மால்கள் மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளது. 

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் 50 முதல் 2000 பேர் வரை பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு முறை குறித்து திருப்பூரில் 18 பின்னலாடை உற்பத்தியாளர் சங்கங்களை சேர்ந்தவர்கள் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கூட்ட அரங்கில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது்: தற்பொழுது அசாதாரணமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் திருப்பூரில் இருந்து பெரும்பாலான பின்னலாடைகள் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளுக்கு ஐரோப்பிய வர்த்தக அவர்களிடமிருந்து பணம் கிடைக்கவில்லை. 

மேலும் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய 2200 கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளது இது பொருளாதார ரீதியாக பின்னலாடை உற்பத்தியாளர்களை பெரிய அளவில் பாதித்துள்ளது. இது குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து உள்ளதாகவும் தெரிவித்தார். தொழிலாளர்கள் நலன் கருதி தொழிற்சாலைகளை உற்பத்தியை நிறுத்தாமல் குறைந்தபட்ச பணி தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

தலைப்புச்செய்திகள்