Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடன் வழங்கும் திட்ட அறிக்கை: தேனி மாவட்ட ஆட்சியர் வெளியீடு

மார்ச் 21, 2020 02:04

தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர்  பல்லவி பல்தேவ்        2020-201ம் ஆண்டிற்கான கடன் வழங்கும் திட்ட அறிக்கையினை வெளியிட்டு தெரிவித்ததாவது:

தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் வங்கிகளின் மூலம் 2020-2021ம் நிதியாண்டிற்கு ரூ.5,768 கோடி கடன் வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தை ஆண்டைவிட 10.05 சதவீதம் கூடுதல் ஆகும். இதில் வேளாண்மை மற்றும் இணை தொழில்களுக்கு ரூ.4,610 கோடியும், சிறு, குறு மற்றும் தொழில்களுக்கு ரூ.520 கோடியும், கல்வி கடன் வழங்கிட ரூ.89 கோடியும், ஏற்றுமதி கடன் வழங்கிட ரூ.11 கோடியும், வீட்டு கடன் வழங்கிட ரூ.230 கோடியும், உள் கட்டமைப்புகளுக்கு ரூ.60 கோடியும், புதுப்பிக்கதக்க எரிசக்தி திட்டத்திற்கு ரூ.8 கோடியும், இதரதொழில்களுக்கு ரூ.240 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் வேளாண் சார்ந்த மாவட்டமாகும், வேளாண்மை மற்றும் பிற தொழில்கள் மேம்படுத்தும் வகையில் கடனுதவி கேட்டு வரும் விவசாயிகள், தொழில்முனைவேர்கள், கல்வி கடன், சுய உதவிக்குழுவினர்களுக்கு அவர்களது மனுக்களை பரிசீலித்து கடனுதவிகள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். 

இதன்மூலம் நமது மாவட்டத்தில் வேளாண் உற்பத்தி பொருட்கள் அதிக்கப்படுத்துவதுடன் வேலைவாய்ப்புகள் அதிகளவில் ஏற்பட்டு வளர்ச்சி பாதையை அடைய முடியும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கனரா வங்கி உதவி பொது மேலாளர் அண்ணாதுரை, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அகிலன், அனைத்து வங்கி மேலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்