Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முகக்கவசம் அணிவது எப்படி? துறையூரில் செயல்விளக்கம்

மார்ச் 21, 2020 02:09

துறையூர்: சட்டப்பணிகள் குழுவும், துறையூர் வழக்கறிஞர்கள் சங்கமும் இணைந்து துறையூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் “கொரோனா வைரஸ்” குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

துறையூர் வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் ராமசாமி முன்னிலையில் துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு-நீதிபதியுமாகிய  சிவக்குமார், மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆறுமுகம், குற்றவியல் நீதித்துறை நடுவர் புவியரசு ஆகியோர் தலைமையில் துறையூர் அரசு மருத்துவர் குமார் மற்றும் முன்னாள் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா வைரஸ் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கைகளை கழுவும் முறையை செயல் விளக்கமாக செய்து காண்பித்தனர். விழிப்புணர்வில் கலந்துகொண்டவர்களுக்கு முக கவசம் அணிவது எப்படி என்று அரசு மருத்துவர்  குமார் அனைவருக்கும் அணிவித்து காண்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் ராமமூர்த்தி, முத்துக்குமார், ஜெகநாதன், பாஸ்கரன், 

கணேசன், ராஜீ, செல்வகுமார், மனோகரன், கோகிலா, மதன்ராஜ், யோகராஜ், உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு முக கவசம் பெற்று விழிப்புணர்வு பெற்றனர்.
 

தலைப்புச்செய்திகள்