Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசிய விருது பெற்ற டைரக்டர் விசு காலமானதால் அதிர்ச்சியில் திரையுலகம்

மார்ச் 23, 2020 10:36


சென்னை: தேசிய விருது பெற்ற படங்களை இயக்கிய டைரக்டரும்  நடிகருமான விசு சென்னையில் மரணம் அடைந்தார். விசு மரணம் திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனரும்  நடிகருமாக இருந்தவர் விசு. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை மோசமடைந்ததால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி விசு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.
விசு உடல் துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

விசு இயக்குனர் நடிகர் வசன கர்த்தா கதாசிரியர்தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர். ஆரம்பத்தில் இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவியாளராக பணியாற்றினார். 1982-ல் கண்மணி பூங்கா என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மணல் கயிறு டவுரி கல்யாணம்  அவள் சுமங்கலிதான்  கெட்டி மேளம் சிதம்பர ரகசியம் சம்சாரம் அது மின்சாரம் காவலன் என் கோவலன் பெண்மணி அவள் கண்மணி  திருமதி ஒரு வெகுமதி வா மகளே வா  மீண்டும் சாவித்திரி உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.

இதில் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார். 1986-ல் வெளியான இந்த படம் சிறந்த சமூக குடும்ப படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெள்ளி விழா கண்டது. சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. இதில் இடம்பெற்ற சம்சாரம் அது மின்சாரம் ஊரை தெரிஞ்சி கிட்டேன்பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.

இதுபோல் விசு நடித்து இயக்கி 1992-ல் வெளியான ‘நீங்க நல்லா இருக்கணும்’ படத்துக்கும் தேசிய விருது கிடைத்தது. சிவகுமார் நடித்த அவன் அவள் அது ரஜினிகாந்தின் தில்லுமுல்லு  நெற்றிக்கண்  புதுக்கவிதை  நல்லவனுக்கு நல்லவன்  மிஸ்டர் பாரத் உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார். தில்லுமுல்லு  குடும்பம் ஒரு கதம்பம்  புதிய சகாப்தம்  மெல்ல திறந்தது கதவு  மன்னன்  வனஜா கிரிஜா  வா மகளே வா  அருணாசலம்  சின்ன மாப்பிள்ளை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மறைந்த விசுவுக்கு உமா என்ற மனைவியும் லாவண்யா சங்கீதா

விசு மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்,  முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன்,  பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன்,  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விசு மரணம் திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது

தலைப்புச்செய்திகள்