Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பியர் கிரில்ஸுக்கு மாஸ்டரான ரஜினி: என்ன சொல்லிக் குடுக்குறார் பாருங்க!

மார்ச் 24, 2020 11:37

இன் டூ தி வைல்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பியர் கிரில்ஸுக்கு தனது ஸ்டைலை கற்றுக் கொடுத்துள்ளார்.

ரஜினிகாந்த் கலந்து கொண்ட டிஸ்கவரி சேனலின் இன்டூ தி வைல்டு நிகழ்ச்சிக்கான ஸ்பெஷல் எபிசோடில் பல சுவாரசியமான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. ரஜினி பற்றியும், அவரின் ஸ்டைல் பற்றியும் பியர் கிரில்ஸ் பாராட்டியுள்ளார். இந்நிலையில், தனது ஸ்டைலில் கண்ணாடியை கழற்றி சுழற்றி மீண்டும் கண்களில் மாட்டுவதை கற்றுக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த்.

கண்ணாடியை கழற்றும் ரஜினி அதை லாவகமாகவும், வேகமாகவும் சுழற்றியதைப் பார்த்து பியர் கிரில்ஸ் ஆச்சர்யமடைந்தார். பின் அவரின் ஸ்டைலான சிரிப்போடு கண்களில் அணிகிறார் ரஜினி. அதை அப்படியே பியர் கிரில்ஸுக்கும் கற்றுத் தருகிறார். இதை பார்த்ததும் ஓரளவுக்கு கற்றுக் கொண்ட பியர், ரஜினியை போலவே முயற்சி செய்து கண்களில் கண்ணாடியை அணிகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அநேகம் பேர் இதனை பலருக்கும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோவில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அதிலும் ஒருவர் இவர்கள் இருவரும் நண்பர்களைப் போல பழகுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

பலரும் ரஜினிகாந்தை புகழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சிலர் ஜாலியாக கிண்டல் செய்தும் கமெண்ட் செய்துள்ளனர். ரஜினி தனது ஸ்டைலில் கண்ணாடியை கழற்றி சுழற்றி காட்டியது போல, பியர் கிரில்ஸ் தனது ஸ்டைலில் புழுக்களை தின்று காண்பிப்பார் எனவும் கமெண்ட் செய்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்