Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஈரானில் சிக்கிய 277 இந்தியர்கள் மீட்பு; யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை

மார்ச் 25, 2020 06:19

புதுடெல்லி: ஈரானில் சிக்கியிருந்த 600 இந்தியர்களில் 277 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து கொரோனா அறிகுறியுடன் வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 

இந்நிலையில், ஈரான் நாட்டில் 600 இந்தியர்கள் சிக்கி இருப்பதாக மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஈரானின் தெஹ்ரானில் இருந்து மஹான் ஏர் விமானம் மூலமாக டில்லி விமான நிலையத்திற்கு முதல்கட்டமாக 277 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 323 பேர் 28 ம் தேதி நாட்டிற்கு அழைத்து வரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்