Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒட்டன்சத்திரம் சந்தை 31ம் தேதி வரை மூடல்

மார்ச் 25, 2020 10:00

திண்டுக்கல்: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 21 நாட்களுக்கு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய காரணங்களை தவிர பொதுமக்கள் தங்கள்  வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பெரும்பாலான சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. சென்னை, கோவை,சேலம், திருச்சி, மதுரையின் பிரதான சாலைகள் அனைத்தும் வாகன நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. எனினும் பொதுமக்கள் முண்டியடித்து பொருட்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.

காய்கறி சந்தைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இது விலையேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் விலை இருமடங்கு உயர்ந்துள்ளது.  இதேபோல் கொரோனா அச்சம் காரணமாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுகிறது.  இங்கு நாள் ஒன்றுக்கு 8,000 டன் வரை காய்கறிகள் விற்பனை ஆன நிலையில், சந்தை மூடப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வியாபாரிகளுக்கும் கடுமையான இழப்பு ஏற்படும் என தெரிகிறது.

தலைப்புச்செய்திகள்