Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி மத்திய பேருந்து நிலையம் வெறிச்!

மார்ச் 25, 2020 11:04

திருச்சி: தமிழகத்தின் இதயப்பகுதியான திருச்சி மத்திய பேருந்து நிலையம் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடந்தது.

நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. மாவட்ட எல்லைகள் முடப்பட்டன. இதன் காரணமாக ஆட்டோ, வேன், கார்கள், தனியார் பஸ்கள் உட்பட  அனைத்தும் தடை செய்யப்பட்டது.

தமிழகத்தின் இதயப்பகுதியான திருச்சிக்கு நெல்லை, சென்னை, கோவை, மதுரை, வேதாரண்யம் என நாலாபுறத்திலும் இருந்து ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து  செல்வதால் 24 மணி நேரமும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பரபரப்பாகவே காணப்படும்.

தற்போது மக்கள், பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் கிடக்கிறது. பஸ் ஸ்டாண்டு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்