Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கம் ஒன்றிய கிராம மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

மார்ச் 25, 2020 11:07

செங்கம்: மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு முன் நடவடிக்கைக்காக 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இந்த நிலையில் செங்கம் புதுப்பாளையம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆண்டாண்டு காலமாக கூலித் தொழில் செய்ய சொந்த ஊரைவிட்டு பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சென்று வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் பண்டிகை காலங்களில் மட்டும் சொந்த ஊருக்கு வந்து கொண்டாடிவிட்டு மீண்டும் பணிபுரியும் மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சென்று விடுவார்கள். இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சொந்த கிராமத்தை தேடி கூட்டம் கூட்டமாக பேருந்து மூலம் வரும் பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் வந்தனர். 

அவர்களை முழுமையாக பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ் ஆலோசனைப்படி உதவி மருத்துவர்களைக் கொண்டு பொதுமக்களை பரிசோதனை செய்து அவரவர் கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் இந்த பரிசோதனை முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கர், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்றனர். அவ்வப்போது பேருந்து நிலையத்திற்கு வரும் அனைத்து பேருந்துகள், பழக்கடைகளில்  வணிகர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்