Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கையில் கத்தியுடன் பெண் சாமியார் மிரட்டல்: தரதரவென இழுத்துச்சென்ற அதிரடி போலீஸ்

மார்ச் 26, 2020 09:29

லக்னோ: “தைரியம் இருந்தா இந்த கூட்டத்தை கலைச்சு பாருங்க,” என்று போலீசாருக்கு பெண் சாமியார் கையில் கத்தியுடன் சவால் விட்டு மிரட்டியதால் போலீசார் பெண்சாமியாரை தரதரவென இழுத்து சென்று கைது செய்தனர். 

உத்தரப்பிரதேசத்தில் தியோரா மாவட்டத்தில் 144 தடையை மீறின ஒரு சம்பவம் நடந்துள்ளது. இங்கு மா ஆதி சக்தி என்ற பெண் சாமியார்தான் ஆசிரமத்தை நடத்துகிறார். லாக்டவுன் பிறப்பிக்கப்பட்ட அன்றுகூட ஆசிரத்தை திறந்து வைத்திருந்தார். மத போதனைக்கும் ஏற்பாடு செய்திருந்தார். அதனால் நூற்றுக்கணக்கானோர் ஆசிரமத்தில் கூடியிருந்தனர். இந்த ஆசிரமம் அந்த பெண்ணின் வீட்டிலேயேதான் நடத்தப்படுகிறது. 

அந்த வீட்டுக்குள் 100 பேர் வரை கூடியிருந்தனர். இந்த விஷயம் போலீசாருக்கு எட்டியதும் விரைந்து வந்தனர். கூட்டத்தை கூட்டக்கூடாது.. சமூக விலகல் கடைப்பிடிக்க வேண்டும் என்று பெண் சாமியாரிடம் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. "அதெல்லாம் முடியாது.. என் வீட்டில நான் கூட்டம் போட்டால் உங்களுக்கென்ன?" என்று திருப்பி கேள்வி கேட்டார். ஒரு கட்டத்தில் அந்த சாமியார், "எங்கே என்னை தடுத்து பாருங்க பார்க்கலாம்" என்று சொல்லி கொண்டே கையில் ஒரு பெரிய வாளை எடுத்து கொண்டு சவால் விட்டார். 

அப்போதும் போலீசார் "தயவு செய்து கூட்டத்தை கலைத்து விடுங்கள். கிருமி பரவும்" என்று எச்சரித்தும் பலனில்லை. அந்த பெண் சாமியாரும் கையில் கத்தியை எடுத்து சுழட்டியபடியே இருந்தார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத போலீஸார் பெண் சாமியாரை வெளுத்து வாங்க தொடங்கினர். அவரது ஆதரவாளர்களையும் விரட்டி அடித்தனர். பெண் சாமியாரை தர தரவென இழுத்து சென்று கைதும் செய்தனர்.

பெண் சாமியாருக்கே அடி வெளுக்கவும் கூட்டம் தலைதெறித்து ஓட தொடங்கியது.  ஆனால் பெண் சாமியார் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரஸை தடுக்க போலீசாரின் இந்த முயற்சிக்கு மாநில மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்