Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடனை செலுத்த வேண்டாம்: உலக வங்கி அதிரடி அறிவிப்பு

மார்ச் 26, 2020 10:00

புதுடெல்லி: கொரோனாவின் கோரத் தாண்டவம் தற்போது உலகின் அனைத்து நாடுகளிலும் பல்வேறு விதமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஏழை நாடுகள் வாங்கிய கடனுக்கான தவணையைத் தற்போது செலுத்த வேண்டாம் என அறிவித்துள்ளது. 

இந்த நிதியை கொண்டு கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது. இந்த முடிவு பல ஏழை நாடுகளுக்குப் பெரிய அளவில் உதவும். மக்கள் தொகை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு மிகவும் அதிகமாகவும், வேகமாகவும் பரவுகிறது. இதற்கான மருந்தும் இல்லை என்ற சூழ்நிலையில் இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது இன்று விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது.

கொரோனாவின் பாதிப்புகள் மிகவும் மோசமாக இருக்கும் இந்தச் சூழ்நிலையில், ஏழை மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரம் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் இந்தத் தருணத்தில் அவர்களுக்கு ஏதுவான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கும் பொருட்டுத் தற்காலிகமாகக் கடனுக்கான தவணையை வசூல் செய்வதை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம் என ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி கூட்டு அறிக்கைவெளியிட்டுள்ளது.

மேலும் உலகின் மொத்த மக்கள் தொகையில் 3இல் 2 பங்கு மக்கள் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் நிலையில் அவர்களுக்கான சுகாதார மற்றும் கொரோனா பாதிப்பில் இருந்து தடுக்கும் முயற்சியாக IDA நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அமைப்புகளும்ரி, அரசுகளும் கொரோனா பாதிப்பைக் குறைக்கப் பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும் தொடர்ந்து அதிகரித்துத் தான் வருகிறது.

அதிக மக்கள் தொகை இருக்கும் இந்தியாவில் கொரோனா 2வது கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், அதை 3வது கட்டத்திற்குச் செல்வதைத் தடுக்கு மத்திய, மாநில அரசுகள் அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் மக்கள் அதை யாரும் பொருட்படுத்தாமல் இயல்பாக உள்ளனர். இதன் வீரியத்தை உணர்ந்தால் தான் நம் நாட்டு மக்களைக் காப்பாற்ற முடியும். உலக வங்கி ஏழை நாடுகள் வாங்கிய கடனுக்கான தவணையைத் தற்போது செலுத்த வேண்டாம் என அறிவித்ததால் கொரோனா பாதித்த நாடுகள் நிம்மதியில் உள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்