Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கன்னியாகுமரி கொரோனா வார்டில் சிசிச்சை பெற்று வந்த 5 பேர் உயிரிழப்பு

மார்ச் 28, 2020 07:30

நாகர்கோவில்: கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சிகிச்சை அளிக்க ப்படுகிறது. 

இந்நிலையில், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் இன்று காலை ஒருவர் இறந்த நிலையில், தற்போது மேலும் 2 பேர் உயிரிழந்தனர். முட்டம் பகுதியைச் சேர்ந்த 2 வயது ஆண் குழந்தையும், திருவட்டாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் இறந்துள்ளனர். இதன்மூலம் கன்னியாகுமரி சிறப்பு வார்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே இறந்த 2 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இறந்த 3 பேரின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகள் வந்தபிறகே, இவர்களின் இறப்புக்கான காரணம் தெரியவரும்.

தலைப்புச்செய்திகள்