Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீடுகளில் உள்ள காலி சிலிண்டரில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது: பாரத் கேஸ் ஏஜென்சி தகவல்

மார்ச் 28, 2020 12:53

திருப்பூர் : “சிலிண்டர்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீடுகளுக்கு டெலிவரி செய்தும் பின்னர் வீடுகளில் உள்ள காலி சிலிண்டர்கள் கிருமி நாசினி தெளித்து எடுக்கப்பட்டு வருகிறது,” என்று பாரத் காஸ் ஏஜென்சி தமிழ்நாடு மாநில செயலாளர் சாமிவேலு தெரிவித்தார்.

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்  கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் விடுத்த அறிவுறுத்தலை அடுத்து 

பாரத் பெட்ரோலியம் திருப்பூர் டீலர் சர்வீஸ் சார்பில்  வாடிக்கையாளர்கள் நலன் கருதி சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீடுகளுக்கு டெலிவரி செய்தும் பின்னர் வீடுகளில் உள்ள காலி சிலிண்டர்கள் கிருமி நாசினி தெளித்து எடுக்கப்பட்டு வருகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகிக்கக் கூடிய ஊழியர்களின் நலன், அலுவலக ஊழியர்களின் நலன், லாரி ஓட்டுநர்களின் நலன் கருதி பாதுகாப்பு விதிகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டு, எரிவாயு சிலிண்டர்கள் ஆட்டோக்களில் ஏற்றும் போதும் பாதுகாப்பு நடவடிக்கையாக முகமுடி, கையுறைகள் வழங்கப்பட்டுள்ளது, மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைக்கும் விதமாக நாங்களும் எங்களுடைய  அதிகபட்ச  கவனிப்புடன்  செயலாற்றி வருகிறோம்.

இவ்வாறு பாரத் காஸ் ஏஜென்சி தமிழ்நாடு செயலாளர் சாமிவேலு தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்