Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

“விஜய் மட்டும் தான் என் தலைவன்”: பிரபல திரைப்பட இயக்குனர் அதிரடி

மார்ச் 28, 2020 12:58

சென்னை: “நடிகர் விஜய் மட்டும் தான் எனக்கு தலைவன்,” என இமைக்கா நொடிகள் பல இயக்குனர் அஜய் ஞானமுத்து கூறியுள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியதில்லை. தற்போது சினிமாவில் முன்னணியில் இருக்கும் பிரபலங்களே பலரும் தாங்கள் விஜய் ரசிகர் என்பதை வெளிப்படையாக பேட்டிகளில் கூறுவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து விஜய் பற்றி இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ளார். "விஜய் மட்டும் தான் என் தலைவன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கி படத்தில் முருகதாஸுக்கு துணை இயக்குனராக பணியாற்றியவர் தான் அஜய் ஞானமுத்து. விஜய் பற்றி ஏதாவது கூறுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தான் அஜய் ஞானமுத்து இப்படி பதில் அளித்துள்ளார். மேலும் சிலரை பற்றி வார்த்தைகளால் குறிப்பிட முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும் விஜய்யை எப்போது இயக்குவீர்கள்? என மற்றொருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தவர், "அது என்னுடைய மிகப்பெரிய கனவு. அது நிஜமாக சில காலம் ஆகும்," என அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

டிமாண்டி காலனி படம் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆன அஜய் ஞானமுத்து அதன் பிறகு நயன்தாரா நடிப்பில் இமைக்கா நொடிகள் படத்தினை இயக்கினார். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடிகர் விஜய்யை தலைவனாக ஏற்றுக் கொண்ட இயக்குர் அஜய் ஞானமுத்துக்கு விஜய் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்