Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனோ நிவாரண நிதி: ‘டிவிஎஸ்’ நிறுவனம் ரூ.30 கோடி வழங்கியது

மார்ச் 28, 2020 01:02

சென்னை: இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை ஒழிக்கவும், அதை மக்கள் மத்தியில் பரவுவதைத் தடுக்கவும் பல அமைப்புகள், நிறுவனங்கள் மத்திய மாநில அரசுகளுக்கு நன்கொடை கொடுத்துள்ளது.

நாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் மற்றும் சுந்தரம்-கிலேடன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராட உதவும், நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை எடுக்கச் சுமார் 30 கோடி ரூபாய் தொகை நன்கொடையாகக் கொடுத்துள்ளது.

இதுகுறித்து டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீநிவாசன் கூறுகையில், “இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து நாட்டை ஒன்று சேர்ந்து காக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். 

இதில் எங்களின் பங்காக 30 கோடி ரூபாய் நிதியை நன்கொடையாகக் கொடுத்துள்ளோம். கொரோனா பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் அதற்காக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு உதவுவதே எங்களின் முதல் குறிக்கோள். 

கடந்த 100 வருடமாக மக்களுக்கும், சமுகத்திற்கும் டி.வி.எஸ் குழுமம் எப்படி உதவி செய்ததோ, அதைத் தொடர்ந்து செய்வோம்,” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்