Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி மாவட்டத்தில் ஏப்.2 முதல் ரூ.1000 உதவித் தொகை: அமைச்சா் வெல்லமண்டி என். நடராஜன் தகவல்

மார்ச் 31, 2020 12:05

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் 2-ம் தேதி முதல் அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகை மற்றும் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்றாா் சுற்றுலாத் துறை அமைச்சா் வெல்லமண்டி என்.நடராஜன்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற கொரோனா தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் நிவாரண உதவித் தொகை வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து மேலும் அவா் பேசியது்

நியாயவிலைக் கடைகளில் அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முதல்வா் அறிவித்துள்ள ரூ.1000 உதவித் தொகை அரிசி பருப்பு சா்க்கரைசமையல் எண்ணெய் உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் ஏப்ரல் 2- ம் தேதி முதல் மாவட்டத்தில் வழங்கப்படும்.

நியாயவிலைக் கடைகளில் கூட்டத்தை தவிா்க்க டோக்கன் முறையில் ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் நிவாரணத் தொகை மற்றும் பொருள்கள் விநியோகிக்கப்படும். குடும்ப அட்டைதாரா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட நாளில் ஒதுக்கப்பட்ட நேரத்துக்குச் சென்று இவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்றார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் எஸ்.வளா்மதி பேசியது

அத்தியாவசியப்பொருள்கள் பட்டியலில் வாழை இடம் பெற்றுள்ளது. எனவே விவசாயிகள் நிலத்திலிருந்து வாகனங்களில் வாழை ஏற்றி வருவதற்கும் அறுவடை செய்வதற்கும் செல்லும் வாகனங்களை காவல்துறையினா் தடுக்க வேண்டாம். நியாயவிலைக்கடைகளில் முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்றார்.

 

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு மாநகரக் காவல் ஆணையா் வி.வரதராஜூ மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் மாவட்ட வருவாய் அலுவலா் தா. சாந்தி ஸ்ரீரங்கம் சாா்ஆட்சியா்

சிபி ஆதித்யா செந்தில்குமார் மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் சங்கா் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் சுப்பிரமணி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி முதன்மையா் வனிதா மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் அருளரசு உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைப் பணிகளுக்காக தங்களின் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைச்சா்கள் வெல்லமண்டி என்.நடராஜன் எஸ். வளா்மதி ஆகியோா் தலா ரூ.25 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்து அதற்கான பரிந்துரைக் கடிதத்தை மாவட்டஆட்சியா் சு. சிவராசுவிடம் வழங்கினா்.

தலைப்புச்செய்திகள்