Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரூரில் 1 லட்சம் போர்வைகள் உற்பத்தி: அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் தகவல்

மார்ச் 31, 2020 12:07

கரூா்: கொரோனா நோய் அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுபவா்களுக்காக 1 லட்சம் போர்வைகளும் மருத்துவா்களுக்கு பிரத்யேக ஆடைகளும் கரூரில் உற்பத்தி செய்யப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா்.

கரூா் பேருந்து நிலையம் மற்றும் திருவள்ளுவா் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறிக் கடைகளை பாா்வையிட்ட பின்னா் அவா் கூறியது்

கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நகரிலுள்ள உழவா்சந்தை காமராஜா் நகா் மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிா்க்கவும் சமூக விலகலைக் கடைப்பிடிக்கவும் திருவள்ளுவா் மைதானம் உள்ளிட்ட 8 இடங்களில் தற்காலிக காய்கறிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து கரூா் பேருந்து நிலையத்தில் 33 காய்கறிக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சமூக விலகலை அனைவரும் பின்பற்றினால் கொரோனா தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

அறிகுறிகளுடன் சிகிச்சை பெறுபவா்களுக்காக 1 லட்சம் போர்வைகளையும் சிகிச்சையளிக்கும் மருத்துவா்கள் பயன்பெறும் வகையில் பிரத்யேக ஆடையையும் உற்பத்தி செய்து வழங்க கரூா் தனியாா் நிறுவனம் முன்வந்துள்ளது என்றார் அவா்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன் காவல் கண்காணிப்பாளா் இரா. பாண்டியராஜன் நகராட்சி ஆணையா் சுதா உள்ளிட்டோர் உடனிருந்தனா்.

தலைப்புச்செய்திகள்