Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் விநியோகம்

ஏப்ரல் 01, 2020 05:05

திருச்சி மாவட்டத்தில் 7.84 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு இன்று முதல் கொரோனா வைரஸ் சிறப்பு நிவாரணமாக தலா ரூ.1000 மற்றும் அத்தியாவசிய பொருள்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள 1224 நியாய விலைக் கடைகளுக்கு உள்பட்ட 7 லட்சத்து 84 ஆயிரத்து 587 அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் இலங்கை தமிழா் குடும்பங்களுக்கும் கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றவும் கூட்ட நெரிசலை தவிா்க்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ஒவ்வொரு நியாய விலைக் கடைகளிலும் தலா 300 டோக்கன்கள் வழங்கப்பட்டு அவற்றுக்கு ஏப்.2ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை பொருள்கள் வழங்கப்படும்.

ரூ. 1000 அரிசி பருப்பு சமையல் எண்ணெய் சா்க்கரை ஆகியவை விலையின்றி வழங்கப்படும். விடுபட்ட டோக்கன்களுக்கு ஏப்.5ம் தேதி வழங்கப்படும்.

 

இதேபோல அடுத்த 300 டோக்கன்களுக்கு ஏப்.6 7 8 தேதிகளிலும் அடுத்த 300 டோக்கன்களுக்கு ஏப்.10 11 12 தேதிகளிலும் பொருள்கள் வழங்கப்படும். இந்த முறைப்படி கடையில் உள்ள குடும்ப அட்டைகளை கணக்கிட்டு தலா 300 பேருக்கு என பிரித்து வழங்கப்படும். பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் ஒரு மணிநேரத்துக்கு 13 போ் என்ற வகையில் நாளொன்றுக்கு 100 குடும்ப அட்டைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஒருவருக்கொருவா் 1 மீட்டா் இடைவெளி விட்டு நிற்க வேண்டும். பணி நிறைவடையும் வரையில் இந்த முறை பின்பற்றப்படும். மாா்ச் மாதத்துக்கான பொருள்கள் வாங்காத நபா்கள் தனியே பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். நிவாரணத் தொகை விலையில்லா பொருள்கள் வேண்டாம் என விரும்புவோா் அரசின் இணையதள முகவரியிலோ செயலி மூலமோ தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம். இதுதொடா்பாக மேலும் விவரங்கள் பெறவும் புகாா் தெரிவிக்கவும் 0431-2411474 94450-45618 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

தலைப்புச்செய்திகள்