Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெடி வைத்து நிரவ் மோடி சொகுசு பங்களா இடிப்பு

மார்ச் 08, 2019 10:37

அலிபாக்: வங்கி மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள நிரவ் மோடி, கடற்கரை அருகே விதிகளை மீறி கட்டிய ரூ.100 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களா வெடிமருந்து வைத்து தகர்க்கப்பட்டது. 

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்ற, வைர வியாபாரி நிரவ் மோடிக்கு, மஹாராஷ்டிராவின் அலிபாக்கில், கடற்கரையோர சொகுசு பங்களா உள்ளது. 33 ஆயிரம் சதுர அடி கொண்ட இது, 100 கோடி ரூபாய் மதிப்பு உடையது. இந்த பங்களாவில், நீண்ட பாதை, இரும்பு வேலி, பெரிய பாதுகாப்பு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. நீச்சல் குளம், விலை உயர்ந்த பொருட்கள் உள்ளன. 

இந்த பங்களா, கடலோர கட்டுப்பாடு விதிகளை மீறி கட்டப்பட்டு உள்ளதால், அதை இடிக்க மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது. கட்டடம் உறுதியாக இருப்பதால் இடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இயந்திரங்கள் மூலம் இடிக்க துவங்கினால், பணி முடிய பல மாதங்கள் ஆகும் என கணக்கிடப்பட்டது. இதையடுத்து, பங்களாவை, டைனமைட் வெடிமருந்து மூலம் தகர்க்க முடிவெடுக்கப்பட்டது.  

இதற்காக கட்டடத்தில் உள்ள தூண்களில், வெடிமருந்து வைக்க இயந்திரம் மூலம் துளையிடப்பட்டது. வெடிமருந்துகளை நிரப்ப தொழில்நுட்ப குழுவினர் அழைக்கப்பட்டனர். பின்னர், வெடிமருந்து வைத்து கட்டடம் தகர்க்கப்பட்டதாக ராய்காட் மாவட்ட கலெக்டர் விஜய் சூர்யவன்ஷி கூறினார்.

தலைப்புச்செய்திகள்