Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கெரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கவச உடைகள்

ஏப்ரல் 01, 2020 11:14

கும்பகோணம்: கெரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை மாவட்ட துணைத்தலைவர் செந்தில் சொந்த நிதியிலிருந்து  ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான கவச உடைகள் சுமார் 300 டாக்டர்கள் மற்றும் மருத்துவ துறை பணியாளர்களுக்கு வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.

கும்பகோணம், ஏப்.2: கும்பகோணத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பணிபுரியும்யில் பணியாளர்கள் வைரசால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க வரும் டாக்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நோய் பரவாமல் இருக்க கவச உடையை சுமார் 300 டாக்டர்கள் மற்றும் மருத்துவ துறை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை மாவட்ட துணைத்தலைவர் செந்தில் சொந்த நிதியிலிருந்து வழங்கிய ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான கவச உடைகளை சுமார் 300 பேருக்கு வழங்கும் விழா அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஞிக்ஷீ கமருல் ஜாமன்யிடம் கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க கவச உடைகளை அமைச்சர் வழங்கினார்

கும்பகோணம் அதிமுக நகர செயலாளர் ராம ராமநாதன், கும்பகோணம் ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், மாவட்ட  கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், கும்பகோணம் பால் கூட்டுறவு சங்க தலைவர் ழிஸிக்ஷிஷி செந்தில், பால் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் சுப்பு அறிவழகன், கவிதா, ஸ்ரீதர், அரசு மருத்துவமனை டாக்டர் பிரபாகரன் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் வனஜா ஆயுர்வேத உதவி மருத்துவ அலுவலர் டாக்டர்  ரிஷிகேஷ் சித்தா மருந்தாளுனர் மீனாட்சி மற்றும் ஏராளமான மருத்துவமனை பணியாளர்களும் ஊழியர்களும் கலந்து கொண்டனர், மேலும் மாவட்ட சித்த மருத்துவ பிரிவு பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்த கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்