Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இடமில்லை

மார்ச் 09, 2019 05:36

இஸ்லாமாபாத் : பாக்., மண்ணில் எந்த பயங்கரவாத அமைப்பிற்கும் இனி இடமில்லை என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாக்., க்கு உலக நாடுகள் அளித்து வரும் அழுத்தம் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்து, வெளியேற்ற போவதாக இம்ரான் கான் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே, தெற்கு பாகிஸ்தானில் பொதுகூட்டம் ஒன்றில் பேசிய அவர், பாக்., மண்ணில் இனி எந்த பயங்கரவாத அமைப்பிற்கும் இடமில்லை. அவர்கள் மற்ற நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதை அனுமதிக்க முடியாது. பாக்.,ல் இருந்து மற்ற நாடுகள் மீதான எந்த ஒரு பயங்கரவாதத்தையும் இந்த அரசு அனுமதிக்காது என்றார். 

இது தொடர்பாக பாக்., அதிகாரிகள் கூறுகையில்; பயங்கரவாத அமைப்புக்களை பாக்., மண்ணில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம். இந்தியாவின் கோபம் காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை என்றனர்.

தலைப்புச்செய்திகள்