Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரபேல் ஆவணங்கள் திருடு போகவில்லை

மார்ச் 09, 2019 05:40

புதுடில்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்படவில்லை என அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் விளக்கம் அளித்துள்ளார்.ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது மார்ச் 07 ம் தேதி ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டு, வெளியிடப்பட்டுள்ளதாக கூறி இருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  

அத்துடன் எதிர்க்கட்சிகளும் வழக்கம் போல் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. ராகுல், மாயாவதி, மம்தா பானர்ஜி, ஷரத் பவார் போன்றோர் இது பற்றி உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், தான் சுப்ரீம் கோர்ட்டில் அளித்த பதில் தொடர்பாக 2 நாட்களுக்கு பிறகு அட்டர்னி ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார்.  

அதில் அவர், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் திருடு போகவில்லை. யஷ்வந்த் சின்கா, அருண் சோரி மற்றும் பிரசாந்த் பூஷண் ஆகியோர் தாக்கல் செய்துள்ளது ஒப்பந்த அசலின் போட்டோ பிரதிகளாகும். அரசு ஆவணங்களை போட்டோ எடுத்து வெளியிட்டதாகவே நான் குற்றம்சாட்டி இருந்தேன். சுப்ரீம் கோர்ட்டில் எனது வாதத்தில் நான் குறிப்பிட்டதை எதிர்க்கட்சிகள் தவறாக புரிந்து கொண்டு, பாதுகாப்பு அமைச்சகம் வசம் இருந்த ஆவணங்கள் திருடு போய் விட்டதாக கூறி வருகின்றன. ஆவணங்கள் திருடு போய் விட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என்றார். 
 

தலைப்புச்செய்திகள்